புளோரிடா விமான நிலையத்தில் பயணியின் பையை சோதனை செய்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

புளோரிடாவில் உள்ள டம்பா சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு (CBP) அதிகாரிகள் மனித எச்சங்களைக் கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளார்.
ஒரு பயணியின் பொருட்களுக்குள் அலுமினியத் தாளில் சுற்றப்பட்டிருந்த நிலையில் மண்டை ஓடு மற்றும் எலும்புகளின் ஒரு பகுதி உட்பட எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக பயணியின் அடையாளத்தை அதிகாரிகள் வெளியிடவில்லை.
குறித்த மனித எச்சங்கள் சடங்கு பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டதாக பயணி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
கடுமையான பொது சுகாதார அபாயங்கள் காரணமாக எச்சங்கள் உடனடியாக அழிக்கப்பட்டன. இதற்கிடையில், எலும்புகள் நாட்டிற்குள் எவ்வாறு கொண்டு வரப்பட்டது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
(Visited 5 times, 1 visits today)