ரஷ்யாவில் அறிமுகமாகும் பாலியல் விடுப்பு : புட்டினின் புதிய முயற்சி!

ரஷ்யாவில் பிறப்பு விகிதம் குறைந்து வருகின்ற நிலையில், அதனை சமாளிக்க புதிய திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் தம்பதிகள் ஊதியத்துடன் கூடிய பாலியல் விடுப்பினை கோரலாம் என தெரிவிக்கப்படுகிறது.
கிரெம்ளினுக்கு விசுவாசமான 25 வயதான எம்.பி. ஜார்ஜி அரபோவ், தம்பதிகளை உடலுறவு கொள்ள ஊக்குவிக்க ஆண்டுதோறும் “மக்கள்தொகை” வாரம் நடத்தும் பாலியல் இடைவேளை திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.
குடும்பத்தைத் தொடங்க ஆர்வமுள்ள தனிமையில் இருப்பவர்களுக்கு, அத்தகைய வாரம் மக்களைச் சந்திப்பதற்கும் தீவிர உறவுகளை உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்படலாம்.” என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் ரஷ்யாவின் பிறப்பு விகிதம் 200 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கருக்கலைப்பு மீதான கட்டுப்பாடுகள் உட்பட ரஷ்யர்கள் அதிக குழந்தைகளைப் பெற ஊக்குவிக்க அரசு முயற்சித்த போதிலும் இது நிகழ்ந்துள்ளது.
தொழிலாளர் அமைச்சர் அன்டன் கோட்யாகோவ், 44, ஒரு சாத்தியக்கூறு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார், அதே நேரத்தில் புடினுக்கு ஆதரவான பேராயர் மற்றும் பிரச்சாரகர் ஆண்ட்ரி தக்காச்சேவ், 55, குழந்தைகளுக்கு தந்தையாகத் தவறும் ஆண்கள் மீது வரி விதிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.