வட அமெரிக்கா

பெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை; டிரம்ப் 5 மில்லியன் இழப்பீடு வழங்க உத்தரவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அமெரிக்காவின் பிரபல எழுத்தாளர் இ.ஜீன் கரோல், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இ.ஜீன் கரோல் இந்த விவகாரம் குறித்து, டொனால்டு டிரம்ப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை பெடரல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் இறுதி விசாரணையில் டிரம்ப் 5 மில்லியன் டொலர் ( இலங்கை மதிப்பில் 159கோடி) இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. பத்திரிக்கையாளர் ஜீன் கரோலை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்கும், அவரை அவமதிப்பு செய்ததற்கும் டிரம்ப் பொறுப்பேற்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஆயினும் டிரம்ப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்ற எழுத்தாளரின் குற்றச்சாட்டை மன்ஹாட்டன் நடுவர் மன்ற நீதிபதி நிராகரித்தார். இந்த தீர்ப்பு குறித்து கருத்துத் தெரிவித்த டிரம்ப் தமக்கு நேர்ந்த அவமானம் என்று கூறினார்.

டிரம்ப் தரப்பில் கூறும் போது இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம். இது ஒரு அவமானம். இந்தப் பெண் யாரென்று கூட எனக்குத் தெரியாது. அவர் யார், எங்கிருந்து வந்தார் என்று தெரியவில்லை. வெறுக்கத்தக்க, கிளிண்டனால் நியமிக்கப்பட்ட நீதிபதியிடமிருந்து நீங்கள் வேறு என்ன எதிர்பார்க்க முடியும், அவர் இந்த விசாரணையின் முடிவை முடிந்தவரை எதிர்மறையாக இருப்பதை உறுதிசெய்ய முயன்றார்,’ என்று கூறப்பட்டு உள்ளது.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!