மக்கள் தொகையில் கடும் வீழ்ச்சி – ரஷ்யா அறிவித்த திட்டத்தால் பெரும் சர்ச்சை!

ரஷ்யாவில் உள்ள ஒரு நகரம் மக்கள் தொகையை அதிகரிக்க கொண்டு வந்துள்ள திட்டத்தால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
ரஷ்யாவிலும் மக்கள் தொகை குறைவாகி வருகிறது. இதனால், ரஷ்யாவின் ஒரியோல் நகரம் பல நடவடிக்களை மேற்கொண்டு வருகிறது.
அந்த நகரத்தில் 8 ஆயிரம் பேர் மட்டுமே இருக்கிறார்கள். இதற்கு காரணம் அங்கு பிறப்பு விகிதம் குறைந்ததுதான்.
இதனால், முன்பே ஒரு திட்டம் கொண்டுவரப்பட்டது. இளம்பெண்கள் கர்ப்பம் தரித்தால் அவர்களுக்கு 100,000 ரூபிள்கள் அளிக்கப்படுவதாக புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒரே நிபந்தனை, அந்த பெண் 12 வாரங்கள் கர்ப்பமாக இருப்பதை நிரூபிக்க வேண்டும்.
தற்போது இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்திருக்கிறார்கள். அதாவது கல்லூரியிலிருந்து பாடசாலை மாணவர்கள் வரை விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு 100,000 ரூபிள்கள் ழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக எந்தவொரு குறைந்தபட்ச வயது வரம்பும் இல்லை என்பதே முக்கிய அம்சமாகும், இது பல்வேறு சர்ச்சைகளையும் எழுப்பியுள்ளது.
பெண்கள் எந்தவொரு வயதிலும் கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றால், அவர்களுக்கு அரசு ஆதரவு அளிக்கும் என்ற நிலைப்பாட்டுடன் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.