ஐரோப்பா

ஜெர்மனியில் வெளிநாட்டவர்கள் வாழும் பகுதியில் கடும் நெருக்கடி நிலை!

ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் பாரிய தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.

ஹமாஸ் அமைப்புடனான இஸ்ரேல் மோதலானது உலக நாடுகளிடமும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது. இந்த மோதலானது ஜெர்மனியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த போரின் தாக்கம் ஜெர்மனியின் பல பிரதேசங்களில் எதிரொலித்துக்கொண்டுள்ளன. பேர்லினில் உள்ள நோயல் கோல் என்ற பிரதேசத்தில் கூடுதலாக வெளிநாட்டு வம்சாவளிகள் வாழுகின்ற பிரதேசங்களில் சட்ட விரோதமான முறையில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறான ஆர்ப்பாட்டங்களுக்கு ஜெர்மனி அரசாங்கமானது தடை விதித்துள்ளது. சில் நகர மண்டபங்களில் இஸ்ரேலுக்கு அதரவாக கொடிகள் ஏற்றப்பட்டுள்ள நிலையில் இந்த கொடிகளுக்கு தீவைக்கும் மற்றுமொரு சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.

ஜெர்மனியில் இது போன்ற குற்றவியல் சம்பவங்கள் 1100 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெர்மனியின் உள்நாட்டு உளவு சபையின் கருத்தின் படி ஜெர்மனியில் தாக்குதல்கள் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்