இந்தியாவில் டஜன் கணக்கான பள்ளிகளுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் – மாணவர் கைது!
இந்தியாவில் டஜன் கணக்கான பள்ளிகளுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததற்காக 12 ஆம் வகுப்பு மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் டெல்லியில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் சம்பந்தமான கடிதங்களை அனுப்பியுள்ளார்.
விசாரணையின் போது, அவர் முன்பும் மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
குறித்த சிறுவன் பள்ளியில் தேர்வு எழுத விரும்பவில்லை என்றும், தேர்வுகளை ரத்து செய்ய பீதியைத் தூண்ட இந்த முறையைப் பயன்படுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 3 times, 3 visits today)