பிரான்சில் மசூதிகளுக்கு வெளியே பன்றித் தலைகளை வைத்த 11 பேரை கைது செய்த செர்பியா
வெளிநாட்டு உளவுத்துறையின் உத்தரவின் பேரில், இந்த மாதம் பாரிஸில் உள்ள மசூதிகளுக்கு வெளியே பன்றித் தலைகளை வைத்த 11 பேரை செர்பிய பொலிஸார் கைது செய்துள்ளதாக உள்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குறைந்தது ஒன்பது மசூதிகளுக்கு வெளியே பன்றித் தலைகளை வைத்ததோடு, பாரிஸில் உள்ள ஹோலோகாஸ்ட் அருங்காட்சியகம், பல ஜெப ஆலயங்கள் மற்றும் ஒரு யூத உணவகம் ஆகியவற்றில் பச்சை வண்ணப்பூச்சு வீசியதாகவும், பெர்லினில் உள்ள பிராண்டன்பர்க் வாசல் முன் எலும்புக்கூடுகளை வைத்ததாகவும் கைது செய்யப்பட்டவர்கள் சந்தேகிக்கப்படுகிறார்கள்.
சந்தேக நபர்கள் செர்பியாவில் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் அனைவரும் செர்பியர்கள் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
M.G. என்ற முதலெழுத்துக்களால் அடையாளம் காணப்பட்ட தேடப்படும் குற்றவாளி, “ஒரு வெளிநாட்டு உளவுத்துறையின் அறிவுறுத்தலின் பேரில்” அவர்களுக்கு பயிற்சி அளித்ததாக சந்தேகிக்கப்படுகிறார்.
எந்த வெளிநாட்டு உளவுத்துறை பயிற்சிக்கு உத்தரவிட்டதாக சந்தேகிக்கிறது அல்லது தப்பியோடிய சந்தேக நபரின் தேசியம் என்ன என்பது குறித்து அமைச்சன் தெரிவிக்கவில்லை.





