இலங்கை

யாழில் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை!

யாழில் பழுதான மற்றும் காலவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக 06 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த 06 பேருக்கு எதிராகவும் நீதிமன்றம் 2 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா தண்ப்பணம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

யாழ். தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் கடந்த இரு வாரங்களாக மேற்கொண்ட பரிசோதனைகளில் இந்த விடயம் அம்பலமாகியுள்ளது.

தெல்லிப்பழை பிரதேசத்திலுள்ள குளிர்பான உற்பத்தி நிலையம் ஒன்றில் காலாவதியான ஜுஸ் பக்கட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த பக்கட்டுக்களை அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளதுடன், ஏனைய பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்ட பக்கட்டுக்களையம் மீள பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!