இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய படகு கைப்பற்றல்
இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய படகு, கைப்பற்றப்பட்டுள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் இந்த படகு கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட இந்தப் படகு, யாழ்ப்பாணம் தலைமையக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இஷாரா கிளிநொச்சியில் தலைமறைவாகியிருக்க உதவியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒருவர், கொழும்பு புதுக்கடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இஷாரா செவ்வந்திக்கு உதவி புரிந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மேலும் நான்கு சந்தேக நபர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அத்துடன், இஷாரா செவ்வந்தியின் தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.





