அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

WhatsAppஇன் இந்த முக்கிய அம்சத்தில் பாதுகாப்பு சிக்கல்… பயனர்களுக்கு எச்சரிக்கை

வாட்ஸ்அப் தற்போது உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு முக்கிய சமூக வலைத்தளங்களில் ஒன்றாகும். புகைப்படங்கள் அனுப்புதல், கால் செய்தல் , வீடியோ கால், வீடியோ , ஆவணங்கள் அனுப்புவது என பல்வேறு அம்சங்கள் இந்த வாட்ஸ்அப்பில் உள்ளது.

இதில் ஸ்டிக்கர் அனுப்புதல் மட்டுமின்றி தற்போது பணம் கூட அனுப்பும் வசதியையும் வாட்ஸ்அப் அறிமுகம் செய்தது.

இதனிடையே வாட்ஸ்அப் ஒருமுறை மட்டுமே பார்க்க கூடிய வகையில் ‘View Once’ என்ற புகைப்படங்களை அனுப்பும் அம்சம் ஒன்றை அறிமுகம் செய்தது. இதில் நீங்கள் ஒருவருக்கு புகைப்படத்தை அனுப்பினால் ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும். மீண்டும் அதனை பார்க்கவோ, வேறு யாருக்கோ பார்வேர்டு செய்யவோ முடியாது.

ஆனால் மெசேஜிங்கில் உள்ள இந்த தனியுரிமையை மையமாகக் கொண்ட அம்சம் ஒரு பெரிய பாதுகாப்புக் குறைபாட்டைக் கொண்டிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது. Tal Be’ery என்ற பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் இந்த சிக்கலைக் கண்டறிந்த பெருமைக்குரியவர்.ஒரு முறை மட்டுமே பார்க்கக்கூடிய ஆப்ஷனில் அனுப்பினாலும் ஒருவர் டெஸ்க்டாப்பில் புகைப்படம்/வீடியோவை பார்ப்பது மட்டுமின்றி அதை அவர்களின் சாதனத்திலும் சேமிக்க முடியும் என்றும் அவர் கூறுகிறார்.

வாட்ஸ்அப் தங்களது யூசர்களுக்கு தவறான தனியுரிமையை வழங்க முயற்சிப்பதை விட, அந்த அம்சத்தை தானே அகற்ற விடுவது நல்லது என்று டெக் க்ரஞ்ச் என்பவர் கூறியதாக அவர் மேற்கோள் காட்டியுள்ளார். தற்போது, ​​வாட்ஸ்அப்பின் ‘View Once’/‘ஒருமுறை பார்க்கவும்’ என்பது தவறான தனியுரிமையின் ஒரு அப்பட்டமான அம்சமாகும், மேலும் இது முற்றிலும் சரி செய்யப்பட வேண்டும் அல்லது அகற்றப்பட வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக வாட்ஸ்அப் யூசர்கள் தாங்கள் ‘View Once’ அம்சத்தில் அனுப்பும் புகைப்படம் அல்லது வீடியோவை ரிசீவ் செய்யும் நபரால் சேமிக்கவோ அல்லது ஸ்கிரீன்ஷாட்டை எடுக்கவோ முடியாது என்று நம்புகின்றனர். ஆனால் உண்மையை அறிந்தால் இந்த அம்சத்தை தினசரி பயன்படுத்தும் பில்லியன் கணக்கானவர்களுக்கு நிச்சயமாக அதிர்ச்சியடைவார்கள்.

ஏனெனில் நீங்கள் அனுப்பும் புகைப்படம்/ வீடியோவை ரிசீவ் செய்யும் நபரால் சேமிக்க முடியும். இதனிடையே வாட்ஸ்அப் எதிர்காலத்தில் ‘View Once’ அம்சத்தை வெப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருகிறது மற்றும் இதற்கான பீட்டா சோதனைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன, ஆனால் அதற்குள் இந்த பாதுகாப்பு குறைபாடுகளை சரி செய்வது நல்லது.

ஏற்கனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாட்ஸ்அப்பின் அம்சத்தில் உள்ள சிக்கலைப் பற்றி பீரி மெட்டாவுக்குத் தெரிவித்தார், மேலும் இந்த சிக்கலை சரிசெய்ய நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும், குறைபாட்டை சரிசெய்து அப்டேட் வெளியிடப்படும் என்றும் அறிக்கை சமர்பித்ததாக கூறப்படுகிறது.

அதுவரை, தனியுரிமை அம்சத்தின் மூலம் புகைப்படங்கள்/ வீடியோக்களை பகிரும்போது கவனமாக இருக்குமாறும், நீங்கள் நம்பக்கூடியவர்களுடன் மட்டுமே இந்த ‘View Once’ அம்சத்தை பகிருமாறும் பரிந்துரைத்துள்ளனர்.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி