விளையாட்டு

இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

9-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில நடக்கிறது.

இந்திய அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா, கனடா அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை வரும் 5ம் தேதி சந்திக்கிறது.

உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் ஜூன் 9-ம் தேதி நியூயார்க்கில் நடக்கிறது.

இந்நிலையில், அச்சுறுத்லை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன் டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்து இருந்ததாக தகவல் வெளியானது. பாகிஸ்தானில் இருந்து அச்சுறுத்தல் வந்ததாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் எதிரொலியாக இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறும் நியூயார்க்கில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் மைதானம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோச்சுல் வெளியிட்டுள்ள அறிக்கையில், உளவுத்துறையின் தகவல்படி இந்த நேரத்தில் நம்பகமான பொது பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை.

ஆனாலும் அதிகப்படியான கண்காணிப்பு, முழுமையான சோதனைகள் உள்ளிட்ட உயர்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

பொது பாதுகாப்பே எனது முதன்மையான முன்னுரிமை. உலகக் கோப்பை போட்டி பாதுகாப்பான, மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருப்பதை உறுதி செய்வதில் உறுதியாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

(Visited 22 times, 1 visits today)

KP

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ