அரசாங்கத்தை கலைக்க இரகசிய பேச்சுவார்த்தை
பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட பிரேரணையின் மூலம் பிரதிநிதிகள் சபையை கலைப்பது தொடர்பில் ஆளும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அடங்கிய குழு இரகசிய கலந்துரையாடலை நடத்தியதாக தேசய பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் சிங்கள புது வருடத்தின் பின்னர் சபையை கலைப்பு தொடர்பில் இரு கட்சிகளின் சிரேஷ்டர்கள் கருத்துகளை பரிமாறிக்கொண்டதாக கூறப்படுகிறது.
அதில் ஆர்வமுள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கையை பட்டியலிட்டு கணக்கிடவும் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இரு கட்சிகளின் சிரேஷ்டர்களுக்கிடையிலான கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட விடயங்களை கட்சித் தலைவர்களிடம் முன்வைத்து இறுதி இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த இரகசிய கலந்துரையாடலுக்காக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழு ஒன்று கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.