இலங்கையில் இரண்டாவது கொவிட் மரணம் – யாழில் அச்சுறுத்தும் டெங்கு
கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான மரணம் பதிவாகியுள்ளது.
கடந்த வாரத்தில் பதிவான இரண்டாவது கோவிட் தொற்று மரணம் இதுவாகும்.
இதேவேளை, டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எதிர்வரும் 02 வாரங்களில் டெங்கு நோயாளர்கள் பெருமளவில் அதிகரிக்கும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.




