ஸ்காட்லாந்தின் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பதவி விலகல்

ஸ்காட்லாந்தின் எதிர்க்கட்சி தலைவரான கன்சர்வேட்டிவ் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் ரோஸை உடல் ரீதியாக தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஜேமி ஹெப்பர்ன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கடற்புறாக்கள் குறித்து டக்ளஸ் ரோஸ் உடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஜேமி ஹெப்பர்ன் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் டக்ளஸ் ரோஸ் பிரதமர் ஜான் ஸ்வின்னிக்கு புகார் அளித்துள்ளார்.
குறித்த புகாரில், அமைச்சர் தன்னை “உடல் ரீதியான தாக்குதல் மற்றும் வாய்மொழி துஷ்பிரயோகம்” செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் புகாரை தொடர்ந்து ஜேமி ஹெப்பர்ன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
(Visited 3 times, 1 visits today)