ஸ்பெயினில் வாட்டி வதைக்கும் வெப்பநிலை – அமுலாகும் தடை
ஸ்பெயினில் வெப்பநிலை அங்கு 39 டிகிரி செல்சியஸுக்கு மேல் கூடினால் வேலைகள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான வெப்பநிலையால் வெளிப்புற வேலைகள் சிலவற்றுக்குத் தடை விதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. நாடளாவிய வெப்பத்தை எதிர்கொள்ள சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட்டது.
ஸ்பெயினின் தேசிய வானிலை அமைப்பு மோசமான வெப்பநிலை குறித்த எச்சரிக்கையை விடுக்கும்போது சில வெளிப்புற வேலைகள் நிறுத்தப்படும். சாலைகளைத் துப்புரவு செய்தல், கட்டுமானப் பணிகள், விவசாயம் ஆகியவை அவற்றுள் அடங்கும்.
நாட்டின் சில பகுதிகள் தொடர் வறட்சியால் கடுமையான விளைவுகளை எதிர்கொள்கின்றன. அத்தகைய இடங்களுக்கு உதவ ஸ்பெயின் அரசாங்கம் 2.4 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆதரவுத் திட்டத்தை அறிவித்தது.
ஸ்பெயினில் கடந்த ஏப்ரல் மாதம் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. அந்நாடு இதுவரை கண்டிராத வெப்பநிலை அதுவாகும். இவ்வாண்டின் முதல் 4 மாதங்களில் வழக்கமாகப் பெய்யும்
மழையின் அளவு குறைந்தது. பாதி அளவுக்கும் குறைவாகவே மழை பொழிந்தது.