ஜப்பான் விமான நிலையத்தில் கத்தரிக்கோலால் ஏற்பட்ட விபரீதம் – 36 விமானங்கள் இரத்து
ஜப்பான் விமான நிலையத்தில் உள்ள கிடங்கில் இருந்து கத்தரிக்கோல் காணாமல் போனதால், 36 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 201 விமானங்கள் தாமதமாகியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக கடந்த சனிக்கிழமை காலை ஹொக்கைடோவில் உள்ள நியூ சிட்டோஸ் விமான நிலையத்தின் உள் முனையத்தில் பாதுகாப்பு சோதனை சுமார் இரண்டு மணி நேரம் இடைநிறுத்தப்பட்டது.
புறப்படும் ஓய்வறையில் இருந்த பயணிகள் மீண்டும் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதால், பெரும் நெரிசல் மற்றும் வரிசைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
காணாமல் போன கத்தரிக்கோலைக் கண்டுபிடிக்க அதிகாரிகள் முயன்றனர், அடுத்த நாள் தொழிலாளர்கள் அவற்றைக் கண்டுபிடித்தனர்.
இது விமானக் கடத்தல் அல்லது பயங்கரவாதம் தொடர்பான சம்பவமாக இருக்கலாம் என்றும், எனவே விழிப்புணர்வு ஏற்படுத்த நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விமான நிலையம் அறிவித்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு விமான நிலையத்தின் பதிலை மக்கள் பாராட்டியுள்ளனர், பலர் இந்த நடவடிக்கை ஜப்பானிய விமானப் பாதுகாப்பில் தங்கள் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியதாகக் கூறினர்.