லெபனானில் கடத்தப்பட்ட சவுதி அரேபிய நபர் விடுவிப்பு
பெய்ரூட்டில் ஞாயிற்றுக்கிழமை கடத்தப்பட்ட சவூதி பிரஜை ஒருவர் சிரிய எல்லைக்கு அருகில் லெபனான் இராணுவத்தின் சிறப்பு நடவடிக்கையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
“சிரிய எல்லையில் ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது கடத்தப்பட்ட சவூதி நாட்டவர் மஷாரி அல்-முதாரியை இராணுவ புலனாய்வு ரோந்து விடுவித்தது மற்றும் கடத்தலில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டனர்” என்று லெபனான் இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடத்தல் தொடர்பாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக லெபனான் உள்துறை அமைச்சர் பஸ்சம் மவ்லவி செய்தியாளர் சந்திப்பில் மேலும் தெரிவித்தார்.
பெய்ரூட் கடற்பரப்பில் நான்கு சக்கர வாகனத்தில் பாதுகாப்புப் பணியாளர்களைப் போல உடை அணிந்த அடையாளம் தெரியாத ஆசாமிகள், உணவகத்தில் இருந்த நபரை கடத்திச் சென்றதாக மூத்த லெபனான் பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது.
கடத்தல்காரர்கள் $400,000 மீட்கும் தொகையைக் கேட்டதாக சவுதி உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன, ஆனால் அது செலுத்தப்படவில்லை என்று மவ்லவி கூறினார்.