பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த சவுதி அரேபியா
புனித யாத்திரை செல்வதாக அனுமதி வாங்கி அரபு நாட்டுக்குச் சென்று அங்கு பாகிஸ்தானியர்கள் பலர் பிச்சை எடுத்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இவ்வாறு புனித யாத்திரை பெயரைச் சொல்லி பிச்சை எடுக்க நுழையும் பாகிஸ்தானியர்களை அரபு அமீரகம் பிடித்து மீண்டும் பாகிஸ்தானுக்கு அனுப்பி வருகிறது.
மேலும், அரபு அமீரகத்தில் பிடிபட்ட பிச்சைக்காரர்களில் 90 சதவீதம் பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என அரபு அமீரகத்திற்கான பாகிஸ்தான் வெளியுறவு அதிகாரி தெரிவித்தார்.
இந்நிலையில், புனிதயாத்திரை விசாவின்கீழ் பாகிஸ்தானிய பிச்சைக்காரர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி சவுதி ஹஜ் அமைச்சகம் பாகிஸ்தானின் மத விவகார அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.
மத யாத்திரை என்ற போர்வையில் சவுதி அரேபியாவுக்கு பிச்சைக்காரர்கள் செல்வதைத் தடுக்கும் வழிகளைக் கண்டறியுமாறும் பாகிஸ்தான் அரசிடம் அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.