ரயில் போக்குவரத்திற்கு முன்னுரிமையளிக்கும் சவுதி அரேபியா : 18 பில்லியன் ஒதுக்கீடு!
சவுதி அரேபியா தனது தலைநகரான ரியாத்தை மாற்றும் புதிய பொது போக்குவரத்து அமைப்பை திட்டமிட்டு வருகிறது. இதற்காக சுமார் 18 பில்லியன்களை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சவூதியின் “விஷன் 2030” முன்முயற்சியின் கீழ் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த திட்டமானது மொத்தம் 109 மைல்கள் நீளம் கொண்ட ஆறு மெட்ரோ பாதைகளைக் கொண்டிருக்கும். இதனை நிர்மாணிப்பதற்கு 23 பில்லியன்கள் செலவாகும் எனக் கூறப்படுகிறது.
85 ரயில் நிலையங்கள் கட்டப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மிகவும் பிரபலாமான கட்டிடக் கலைஞர்கள் இதற்காக பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.





