அமெரிக்காவின் அச்சத்தை உறுதிப்படுத்திய செயற்கைக்கோள் படங்கள் – வளைகுடா பகுதியில் கப்பல்களை நிலைநிறுத்திய சீனா!
பெய்ஜிங்கிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள கடற்படைத் தளத்திலிருந்து எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள், சீனா தனது உலகளாவிய இராணுவ தடயத்தை விரிவுபடுத்துகிறது என்ற அமெரிக்க அச்சத்தை உறுதிப்படுத்துவதாக தோன்றுகிறது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கம்போடியாவில் தாய்லாந்து வளைகுடாவில் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள சீன கடற்படையின் A56 வகை 1,500 டன் போர்க்கப்பல்களை பிபிசி வெளியிட்டுள்ள படங்களில் காண முடிகிறது.
தென் சீனக் கடலில் உள்ள அதன் மூன்று செயற்கைத் தீவுகளையாவது கைப்பற்றி ஆயுதம் ஏந்திய பின்னர், உலகெங்கிலும் மேலும் கடற்படை புறக்காவல் நிலையங்களை நிறுவ சீனா விரும்புகிறது.
இது தொடர்பில் அமெரிக்கா பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தேகம் வெளியிட்டு வந்த நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்து.