இலங்கை

சந்தோஷ் நாராயணின் இசை நிகழ்ச்சியில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு மௌன அஞ்சலி

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இன்று இடம்பெற்று வரும் தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் நடத்தப்பட்ட படுகொலையை மறைக்கவே அதே நாளில் இசை நிகழ்ச்சி நடாத்தப்படுவதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில் இசை நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது,கலையும் கலாச்சாரமும் சிறந்து ஓங்கும் இந்த யாழ் மண்ணில் யாழ்கானம் என்ற இந்த இசை நிகழ்ச்சியை அளிப்பதில் சந்தோஷ் நாராயணனும் அவர் குழுவினரும் பெருமகிழ்ச்சி கொள்கின்றனர். இம்மண்ணும் இம்மண்ணில் வாழும் மக்களும் கண்ட துயர்கள் அநேகம்.ஒரு வருடத்தின் 365 நாட்களில் எந்த திகதியையும் எடுத்து வரலாற்று ஏடுகளைப் பின்னோக்கி புரட்டினாலும் அத்திகதியில் ஒரு கொடூர சம்பவம் ஒரு துயர்மிகு சம்பவம் நிகழ்ந்திருக்கும்.

ஏன், இன்றும் இத்திகதியில் சரியாக 36 வருடங்களுக்கு முன் யாழ் வைத்தியசாலையில் நடந்த கொடூரமான நிகழ்வை நாம் துயருடன் நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறோம். கலை நிகழ்ச்சிகள் உள்ளத் துயர்களை நீக்கும் மருந்தாவன. அதனால் சந்தோஷ் நாராயணனும் அவரது குழுவும் இவ்விசை விருந்தை ஒரு இசை மருந்தாகவே மக்களுக்கு வழங்குகின்றனர்.

ஆதலால் பலதசாப்தங்களாக நடந்த கொடிய யுத்தத்தில் மறைந்த எம் நாட்டு மக்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்திவிட்டு இம்மருந்தை அருந்துவதே பொருத்தமானதாய் இருக்கும்.இயலுமானவர்கள் எல்லோரும் எழுந்து ஒருநிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகிறோம் என தமிழிலும் ஆங்கிலத்திலும் தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து அனைவரும் எழுந்து ஒரு நிமிட மௌன அஞ்சலியை உயிரிழந்தவர்களுக்கு செலுத்தினர்.

(Visited 26 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்