அறிவியல் & தொழில்நுட்பம்

குறைந்த விலையில் சாம்சங் அறிமுகம் செய்த பிரீமியம் டேப்லெட் கேலக்ஸி டேப்

உற்பத்தித் திறனை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட, பட்ஜெட் விலையிலான சாம்சங் கேலக்ஸி டேப் S10 லைட் (Galaxy Tab S10 Lite)-ஐ சாம்சங் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டேப்லெட் எஸ் பென் (S Pen) வசதியுடன் வருகிறது. இது செப்.5-ஆம் தேதி முதல் விற்பனைக்குக் கிடைக்கும்.

டிஸ்பிளே: 10.9-இன்ச் TFT டிஸ்பிளே-வைக் கொண்டுள்ளது. இதில் உள்ள விஷன் பூஸ்டர் (Vision Booster) தொழில்நுட்பம், உட்புற & வெளிப்புறப் பயன்பாடுகளுக்குத் திரையின் பிரகாசத்தை தானாகச் சரிசெய்கிறது. மேலும், குறைந்த நீல ஒளி உமிழ்வு, நீண்ட நேரம் பயன்படுத்தும்போது கண்களுக்குச் சௌகரியத்தைக் கொடுக்கிறது.

செயல்திறன்: ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தில் இயங்கும் இந்த டேப்லெட்டில், சாம்சங் எக்ஸினோஸ் 1380 (Samsung Exynos 1380) செயலி பொருத்தப்பட்டுள்ளது. இது 6GB RAM+128GB உள்ளக சேமிப்பு வசதியுடன் வருகிறது. கூடுதலாக, 2TB வரை நினைவகத்தை விரிவாக்கம் செய்ய மைக்ரோ SD கார்டு ஸ்லாட் வசதியும் இதில் உள்ளது.

கேமரா & பேட்டரி: பின் பகுதியில் 8MP கேமராவும், முன் பகுதியில் 5MP கேமராவும் உள்ளன. 8,000mAh பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பதால், நீண்ட நேரம் பயன்படுத்தலாம்.

கூகுளின் ‘சர்க்கிள் டூ சர்ச்’ அம்சம் உள்ளது. இதன் மூலம் திரையின் எந்த இடத்திலிருந்தும் எளிதாக மொழிபெயர்க்கலாம். துல்லியமான எஸ் பென், சாம்சங் நோட்ஸ் (Samsung Notes) செயலியில் கையெழுத்து குறிப்புகளை ஒழுங்கமைக்கவும், கணித சமன்பாடுகளைத் தீர்க்கவும் உதவுகிறது. ஒரே நேரத்தில் பல ஆப்ஸ்களில் செயல்பட ஸ்ப்ளிட் வியூ (Split View) அம்சம் உதவுகிறது. இதன்மூலம், குறிப்புகள், புகைப்படங்கள் மற்றும் பிற ஆவணங்களை ஒரே நேரத்தில் திரையில் பார்த்துக்கொள்ளலாம். இந்த டேப்லெட்டில் Goodnotes, Clip Studio Paint, LumaFusion, Notion போன்ற பிரபலமான உற்பத்தித்திறன் சார்ந்த செயலிகள் முன்னரே இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன.

இந்த டேப்லெட் வாங்குபவர்களுக்கு, கிளிப் ஸ்டுடியோ பெயிண்ட் (6 மாதங்கள் இலவசம்), லூமாஃபியூஷன் (66% தள்ளுபடி), குட்நோட்ஸ் (1 வருடம் இலவசம்) மற்றும் நோஷன் (1 மாதம் இலவசம்) போன்ற பல செயலிகளின் சந்தாக்களில் ஆஃபர் வழங்கப்படுகின்றன.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்