மூன்றாக மடிக்க கூடிய Samsung Galaxy G Fold – கசிந்த தகவல்

சாம்சங் நிறுவனத்தின் முதல் டிரிபிள்-ஃபோல்டு ஸ்மார்ட்போனுக்கு கேலக்ஸி ஜி ஃபோல்டு என்று பெயர் வைக்க இருப்பதாக தென் கொரியாவின் நேவர் பிளாட்ஃபார்மில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன் உலகில் முன்னணி நிறுவனமான சாம்சங், அதன் முதல் டிரிபிள்-ஃபோல்டு ஸ்மார்ட்போனை இந்த ஆண்டு, அதன் அடுத்த தலைமுறை ஃபோல்டபிள் சீரிஸுடன் வெளியிடும் என்று ஒரு வதந்தி பரவி வருகிறது. ஆனால் , சமீபத்திய வதந்தி ஒன்று, நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனுக்கு சாம்சங் கேலக்ஸி ஜி ஃபோல்டு என்று பெயரிடக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த 2023ஆம் ஆண்டில் இந்த யோசனையை அறிமுகப்படுத்தியபோது, நிறுவனம் இதை மல்டி-ஃபோல்டு போன் என்று அழைத்திருந்தது. ஆனால், இப்போது வரை எந்த அதிகாரப்பூர்வ பெயரும் அதற்கு வைக்கப்படவில்லை.
தென் கொரியாவின் சர்ச் இன்ஜினான நேவரில், லான்சுக் கூற்றுப்படி, சாம்சங்கின் வரவிருக்கும் டிரிபிள்-ஃபோல்டு ஸ்மார்ட்போன், கேலக்ஸி இசட் தொடரில் சேர்க்கப்படாது, மாறாக கேலக்ஸி ஜி ஃபோல்டு என்று அறிமுகமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கூடுதலாக, தொழில்நுட்ப வல்லுநர்களின் கருத்துப்படி, இந்த டிரிபிள்-ஃபோல்டு ஸ்மார்ட்போனை சாம்சங் இந்த ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஆனால் ஜனவரி 2026 இல் விற்பனைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஹவாய் மேட் எக்ஸ்டி போலல்லாமல், சாம்சங்கின் ட்ரை-ஃபோல்டு இருபுறமும் மடிக்கக்கூடியதாக இருக்கும் மற்றும் முழுமையாக விரிக்கப்படும்போது, 9.96-இன்ச் அளவில் பெரிய டிஸ்ப்ளேவையும், 6.54-இன்ச் உயரமும் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஹவாய் மேட் எக்ஸ்டி மற்றும் கேலக்ஸி ஜி ஃபோல்டு ஆகியவை கிட்டத்தட்ட ஒரே எடையில் இருக்கவே வாய்ப்புள்ளது என்றாலும், சாம்சங் டிரிபிள்-ஃபோல்டு ஸ்மார்ட்போன் சற்று தடிமனாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முந்தைய அறிக்கைகள், சாம்சங்கின் இந்த ட்ரை-ஃபோல்டு ஸ்மார்ட்போன் ஜி போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்றும், அதன் வெளிப்புற ஸ்கிரீன்கள் உள்நோக்கி மடிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவிக்கிறது.
வடிவமைப்பைப் பொறுத்தவரையில், ஹவாயின் மேட் எக்ஸ்டி-க்கும், சாம்சங்கின் இந்த மாடலுக்கும் நிறைய முரண்பாடு இருக்க வாய்ப்புள்ளது. இது உள்நோக்கி மற்றும் வெளிப்புறமாக மடிக்கும் எஸ் அல்லது இசட் வடிவத்தைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. சாம்சங்கின் இந்த வடிவமைப்பு, நீடித்துழைக்கும் என்பதைக் காட்டுகிறது.
சாம்சங்கின் ட்ரை-ஃபோல்டு ஸ்மார்ட்போன் பற்றிய அதிகாரப்பூர்வ விவரங்கள் குறைவாகவே உள்ளன. இது 12.4-இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என்றும், ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் என இரண்டிற்கும் மாற்றாக தனித்து நிற்கும் என்றும் கூறப்படுகிறது. ஹவாய்யின் 10.2-இன்ச் மேட் எக்ஸ்டி -ஐ கூட மிஞ்சும் அளவிற்கு, பகுதியளவு விரிக்கப்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கும். அதே நேரத்தில், பார்வை அனுபவத்திற்காக 10.5-இன்ச் டிஸ்ப்ளேவையும் வழங்கும் என்று கூறப்படுகிறது.
இந்த ஆண்டு, மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களுக்காக சாம்சங் முக்கிய திட்டங்களை வைத்திருப்பதாக தெரிகிறது. கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு மற்றும் கேலக்ஸி எஸ்25 தொடர் வெளியீட்டுக்கு பிறகு, நிறுவனம் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.