இலங்கை செய்தி

பெண்களை தொந்தரவு செய்யும் நபர்கள்:சம்மாந்துறை பொலிஸார் விடுத்த அறிவித்தல்

சம்மாந்துறையில் உள்ள பகுதிகளில் அதிக ஒளி மற்றும் ஒலி எழுப்பும் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள் பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியில் பிரத்தியேக வகுப்புகள் ஆரம்பிக்கும் போது அல்லது முடிவடையும் போது பெண் பிள்ளைகளுக்கு தொந்தரவு செய்யும் நபர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கவுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ் விடயம் தொடர்பில் தகவல் தருபவரின் இரகசியம் பாதுகாக்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்மாந்துறை பொலிஸ் நிலையம் 0672 260 222 எண்ணை தொடர்பு கொண்டு குறித்த நபர்கள் பற்றிய தகவலை அறிவிக்குமாறும் கேட்டுள்ளனர்.

(Visited 13 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை