அமெரிக்காவில் முட்டைகளால் அச்சுறுத்தும் சால்மோனெல்லா தொற்று – 95 பேர் பாதிப்பு

அமெரிக்காவில் சால்மோனெல்லா பாக்டீரியா தொற்றால் குறைந்தது 95 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்கள், 2025 ஆம் ஆண்டின் தொடக்கமான ஜனவரி மாதத்திலிருந்து பதிவாகியுள்ளன.
இந்த தொற்று, குறிப்பிட்ட சில வகை முட்டைகள் மூலம் ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. அந்த சந்தேகத்திற்குரிய முட்டைகள் தற்போது மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
கலிபோர்னியாவில் அமைந்துள்ள Country Eggs நிறுவனம், தாங்கள் விற்பனை செய்த பெரிய பழுப்பு நிற முட்டைகளை சந்தையிலிருந்து வாபஸ் பெற்றுள்ளது.
தொற்று சம்பவங்கள் குறைந்தது 14 அமெரிக்க மாநிலங்களில் பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Country Eggs நிறுவனத்திடமிருந்து முட்டைகளை வாங்கியவர்கள் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்துமாறு, மற்றும் உணவாக பயன்படுத்த வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அரசுப் பரிசோதனைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன. மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எச்சரிக்கப்பட்டுள்ளது.