சஜித் பிரேமதாச ஊழல் செய்யாதவர்!!1 தயாசிறி எம்.பி புகழாரம்
சஜித் பிரேமதாச ஊழல் செய்யாதவர் என்றும், எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு நாட்டுக்காக உழைக்கும் ஒரே தலைவர் அவர்தான் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவி தொடர்பில் மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்றம் நேற்று (04) வழங்கிய தீர்மானம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த எம்.பி., ஜயசேகர, தாம் கட்சியில் தொடர்ந்தும் இருந்திருந்தால் இதற்கு இடமளித்திருக்க மாட்டோம் என்றார்.
மேலும் கட்சி தற்போது பாரிய நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும், அதற்கு மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரைச் சூழவுள்ள உள்ளவர்களே பொறுப்பு எனவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
மேலும், இவ்வாறான சூழலில் கட்சியின் தலைவர் பதவியை பெற்றுக் கொள்வதில் தனக்கு விருப்பமில்லை எனவும் முன்னாள் பொதுச் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.





