IMFஇன் கைப்பாவையாக அரசாங்கம் – வரவு செலவு திட்டத்தை விமர்சிக்கும் சஜித்!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் முன்வைக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாக விமர்சித்துள்ளார்.
மக்களுக்கு நிவாரணம் வழங்காத வரவு செலவு திட்டம் எனவும், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி ஒருவரால் எழுதப்பட்டதுபோலவே அது உள்ளது எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
‘ சர்வதேச நாணய நிதியத்திடம் இந்த அரசாங்கம் சோரம்போய் உள்ளது. அதன் கைப்பாவையாகவே செயற்படுகின்றது. மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.” எனக் கூறியுள்ளார்.
(Visited 1 times, 1 visits today)





