ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போர் முடிவுக்கு வரவேண்டும்: ஆஸ்திரேலியா வலியுறுத்து!
உக்ரைன்மீது Ukraine ரஷ்யா Russia தொடுத்துள்ள சட்டவிரோதப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலியாAustralia மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
உக்ரைன்மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போர் தொடங்கப்பட்டு நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்தது.
இதனை முன்னிட்டு ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் செனட்டர் பெனி வோங் Senator Penny Wong விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
மேற்படி அறிக்கையில் உக்ரைனுக்கான தனது முழுமையான ஆதரவை ஆஸ்திரேலியா உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன், உக்ரைனின் தற்காப்பு மற்றும் எரிசக்தித் தேவைகளுக்காகச் சுமார் 1.7 பில்லியன் ஆஸ்திரேலிய டொலர் நிதியுதவியை ஆஸ்திரேலியா வழங்கியுள்ளது.
ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்கும் நோக்கில், அதன் நிதி, பாதுகாப்பு மற்றும் எரிசக்தித் துறைகளை இலக்காகக் கொண்டு 180 புதிய தடைகளை ஆஸ்திரேலிய அரசு விதித்துள்ளது.
குறிப்பாக, ரஷ்யாவின் பொருளாதாரத்தை இலக்கு வைத்து கச்சா எண்ணெய் விலைக் கட்டுப்பாட்டைத் தளர்த்தி, கிரிப்டோகரன்சி அமைப்புகள் மீதும் முதன்முறையாகக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
சர்வதேச சட்டங்களை மதிக்கவும், உக்ரைனின் சுயாதிபத்தியத்தை அங்கீகரிக்கவும் ரஷ்யாவிற்கு ஆஸ்திரேலியா அழைப்பு விடுத்துள்ளது.
நீடித்த அமைதியை நிலைநாட்ட சர்வதேச துணையுடன் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதாக ஆஸ்திரேலியா உறுதியளித்துள்ளது எனவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.





