பிரித்தானிய அமைச்சருக்கு மரண பயத்தை காண்பித்த ரஷ்ய படைகள்!
பிரிட்டனின் புதிய பாதுகாப்புச் செயலர் ஜான் ஹீலி இந்த வார இறுதியில் உக்ரைனில் உள்ள ஒடேசாவிற்கு தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது வெடிகுண்டு வெடித்ததை அடுத்தது தங்குமிடம் ஒன்றில் மறைந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஒடேசாவில், அவர் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ருஸ்டெம் உமெரோவ் ஆகியோரை சந்தித்துள்ளார்.
சனிக்கிழமை அவர்கள் பேச்சுவார்த்தையை முடிப்பதற்கு முன்பு இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 11 times, 1 visits today)





