புட்டினின் ஏவுகணை மிரட்டல் – நேட்டோ கூட்டணியை விரைவில் சந்திக்க தயாராகும் உக்ரைன்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் புதிய ஏவுகணைகள் இருப்பில் உள்ளதாக அறிவித்து மிரட்டல் விடுத்துள்ளார்.
அந்த அறிவிப்பு மேற்கத்திய நாடுகளுக்கு மிரட்டலாகப் பார்க்கப்படுகிறது.
உக்ரைன் மீது அதிவேக ஏவுகணைத் தாக்குதலைத் தொடுத்த பிறகு அவர் அவ்வாறு கூறினார்.
உக்ரைன் அமெரிக்க, பிரித்தானிய ஏவுகணைகளை ரஷ்யாவுக்குள் பாய்ச்சியது.
அதற்குப் பதிலடியாக அதிவேக ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக புட்டின் குறிப்பிட்டார்.
ரஷ்யாவின் அண்மைத் தாக்குதலைத் தொடர்ந்து, நேட்டோ கூட்டணியை விரைவில் சந்தித்துப் பேசுவதற்கு உக்ரைன் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
(Visited 1 times, 1 visits today)