அமெரிக்க தடைகளுக்கு பிறகு வெளிநாட்டு சொத்துக்களை விற்கும் ரஷ்ய எண்ணெய் நிறுவனம்
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவை போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வைக்கும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்(Donald Trump) விதித்த தடைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, ரஷ்ய எண்ணெய் நிறுவனமான லுகோயில்(Lukoil) தனது சர்வதேச சொத்துக்களை விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது.
மாஸ்கோ(Moscow) தனது தாக்குதலை நிறுத்தாததால் விரக்தியடைந்ததாகக் கூறிய டிரம்ப், கடந்த வாரம் இரண்டு முன்னணி எண்ணெய் நிறுவனங்களான லுகோயில் மற்றும் ரோஸ்நெப்ட்(Rosneft) மீது தடைகளை விதித்தது.
லுகோயில் 11 நாடுகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களில் பங்குகளைக் கொண்டுள்ளது. பல்கேரியா(Bulgaria) மற்றும் ருமேனியாவில்(Romania) சுத்திகரிப்பு நிலையங்களையும், நெதர்லாந்தில்(Netherland) ஒரு சுத்திகரிப்பு நிலையத்தில் 45% பங்குகளையும், பல நாடுகளில் எரிவாயு நிலையங்களையும் கொண்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் இந்தத் தடைகள் லுகோயில் மற்றும் ரோஸ்நெப்ட் ரஷ்யாவிற்கு வெளியே வணிகம் செய்வதை கடினம் ஆக்கியுள்ளது.
அமெரிக்க வணிகங்கள் இரண்டு நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வதைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றின் பரிவர்த்தனைகளைக் கையாளும் வெளிநாட்டு வங்கிகள் மீது இரண்டாம் நிலைத் தடைகள் விதிக்கப்படும் என்ற அச்சுறுத்தலும் உள்ளது.





