ukவின் புதிய உளவுத்துறை தலைவருடன் தொலைபேசியில் உரையாடிய ரஷ்ய அதிகாரி!
பிரித்தானியாவில் MI6 உளவுத்துறை தலைவராக பதவியேற்ற பிளேஸ் மெட்ரெவேலி (Blaise Metreweli) ரஷ்ய வெளியுறவுத்துறை அதிகாரியுடன் “நீண்ட” தொலைபேசி உரையாடலை நடத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய ஊடகங்கள் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளன.
ரஷ்ய வெளியுறவுத்துறை அதிகாரி செர்ஜி நரிஷ்கின் (Sergey Naryshkin) இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகள் லண்டனில் அதிகாரப்பூர்வமாகப் பணியாற்றினர் என்றும், SIS அதிகாரிகள் மொஸ்கோவில் அதையே செய்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இருப்பினும் தொலைபேசியில் பேசப்பட்ட விடயங்களை அவர் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





