எஸ்தோனியாவின் வான்வெளியில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய போர் விமானங்கள்

மூன்று சூப்பர்சோனிக் போர் விமானங்கள் மூலம் ரஷ்யா தனது வான்வெளியை அத்துமீறி நுழைந்ததாக எஸ்தோனியா தெரிவித்துள்ளது.
வெளியுறவு அமைச்சர் மார்கஸ் சாக்னா, மூன்று மிக்-31 விமானங்கள் எஸ்தோனிய வான்வெளியில் நுழைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையை “விரைவான அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தத்துடன்” எதிர்கொள்ள வேண்டும் என்று Xல் மார்கஸ் சாக்னா தெரிவித்துள்ளார்.
மேலும், நேட்டோ செய்தித் தொடர்பாளர் அலிசன் ஹார்ட் இது மாஸ்கோவின் “பொறுப்பற்ற நடத்தை” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
பின்லாந்து வளைகுடாவில் அமைந்துள்ள வைண்ட்லூ தீவு பகுதியில் உள்ள தேசிய வான்வெளியில் மூன்று ரஷ்ய போர் விமானங்கள் நுழைந்ததாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது, இந்த ஆண்டு இது நான்காவது ரஷ்ய ஊடுருவல் ஆகும்
(Visited 9 times, 1 visits today)