4 வருடங்களுக்கு பின் புதிய பணியாளர்களை வரவேற்ற தூதரகம்
வடகொரிய தலைநகர் பியாங்யாங்கில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக புதிய பணியாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மார்ச் மாதம் சீனாவின் புதிய தூதர் நுழைந்த பிறகு, புதிய ஊழியர்கள் அனுமதிக்கப்படும் இரண்டாவது தூதரகம் ரஷ்யாவாகும்.
“செப்டம்பர் 7 ஆம் தேதி, பியோங்யாங் சுனன் சர்வதேச விமான நிலையத்தில், 2019 க்குப் பிறகு முதல் முறையாக, நாங்கள் எங்கள் புதிய சகாக்களை அதாவது 20 தூதர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களை பணியாளர்கள் சுழற்சி அடிப்படையில் தூதரகத்திற்கு வந்தடைந்தோம்” என்று தூதரகம் தெரிவித்துள்ளது.
வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் விரைவில் ரஷ்யாவுக்குச் சென்று புடினைப் பார்க்கவும் ஆயுத ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்கவும் கூடும் என்ற தகவல்களுக்கு மத்தியில் புதிய ரஷ்ய ஊழியர்கள் வந்துள்ளனர்.
(Visited 3 times, 1 visits today)