வட்டி விகிதங்களை உயர்த்தும் ரஷ்ய மத்திய வங்கி!
ரஷ்யாவின் மத்திய வங்கி இன்று (08.15) வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
உக்ரைனுடனான போரின் தொடக்கத்தில் இருந்து நாட்டின் நாணயம் அதன் குறைந்த மதிப்பை அடைந்த பிறகு பணவீக்கத்தை எதிர்த்துப் போராடவும் ரூபிளை வலுப்படுத்தவும் முன்னெடுக்கப்பட்ட ஒரு அவசர நடவடிக்கை இது எனக் கூறப்பட்டுள்ளது.
மாஸ்கோ இராணுவச் செலவினங்களை அதிகரிப்பதாலும், மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் எரிசக்தி ஏற்றுமதி வீழ்ச்சியடைந்தது உள்ளிட்ட பல்வேறு விடயங்களை ரஷ்யா எதிர்கொண்டு வருகிறது.
காலப்போக்கில் பொருளாதாரத் தடைகள் நீண்ட கால பொருளாதார வளர்ச்சியை அழிக்கும் அதே வேளையில், நிதி பற்றாக்குறைக்கு வழிவகுக்கும். ஆகவே ரஷ்யா தனது வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
(Visited 8 times, 1 visits today)