ஐரோப்பா

உக்ரைனின் 13 பிராந்தியங்களில் உள்ள வீடுகள், மின்கட்டமைப்புகளை இலக்கு வைத்துள்ள ரஷ்யா!

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் வேளையில் ரஷ்யா தனது தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

டிசம்பர் 25 ஆம் திகதிக்கு முன்னர் அமெரிக்கா முன்மொழிந்துள்ள போர் நிறுத்தத்தை உறுதி செய்வதற்கான நம்பிக்கைகள் மங்கி வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைனின் 13 பிராந்தியங்களில் உள்ள வீடுகள் மற்றும் மின் கட்டமைப்பை குறிவைத்து ரஷ்யா தனது தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றது.

இதனால் குளிரான காலநிலையில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பரிதவித்து வருவதாக உக்ரைன் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையே உக்ரைனின் கிழக்கில் உள்ள பாதுகாப்பு நகரங்களையும் ரஷ்யா குறிவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கு ரஷ்ய துருப்புக்கள் போர்க்களத் தாக்குதலை நடத்துவதால், உக்ரைனியப் படைகள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஷ்யாவின் இந்த தாக்குதல் நடவடிக்கைகள் புட்டினின்   படையெடுப்பைத் தொடரும் நோக்கத்தை நிரூபிக்கிறது என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensk) டெலிகிராம் செய்தி செயலியில் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!