உக்ரைனின் கீவ் மீது ரஷ்யா பாரிய தாக்குதல் – 6 பேர் மரணம்
ரஷ்யப்(Russia) படைகள் கியேவ்(Kyiv) மீது ஒரு பெரிய அளவிலான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலில் உக்ரைன் தலைநகரின் 10 மாவட்டங்களில் கடும் சேதங்கள் பதிவாகியுள்ளது.
தெற்கில் உள்ள கடலோர நகரமான சோர்னோமோர்ஸ்க்(Chornomorsk) மீது ஒரு தனி ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக ஒடேசா(Odessa) ஆளுநர் ஓலே கிப்பர்(Oleh Kipper) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தாக்குதல் குறித்து உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelensky), “இது ஒரு கொடூரமான தாக்குதல் என்றும், குழந்தைகள் மற்றும் ஒரு கர்ப்பிணிப் பெண் உட்பட பலரைக் கொன்றதாகவும் Xல் பதிவிட்டுள்ளார்.
(Visited 2 times, 2 visits today)




