அதிக அளவில் பேப் 3000 ரக வெடிகுண்டுகளை உற்பத்தி செய்யும் ரஷ்யா

ரஷ்யாவின் நிஸ்னி நவ்கோராடு பகுதியில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் பேப் 3000 ரக விமானத்தின் மூலம் வீசக்கூடிய வெடிகுண்டுகள், அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கீ ஷோய்கு இதனை தெரிவித்தார்.
ஆயுத தொழிற்சாலையை ஆய்வு செய்த அவர், ரஷ்ய ராணுவத்துக்கான வெடிபொருள்கள் உற்பத்தி 22 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.
உக்ரைனுடனான போரில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினருக்கு வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களைத் தடையில்லாமல் போதுமான அளவுக்கு வழங்கும் வகையில், உற்பத்தியை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார
(Visited 18 times, 1 visits today)