உக்ரைனின் மையப்பகுதியில் தாக்குதல் நடத்திய ரஷ்யா ; 10 பேர் பலி
கடந்த ஆண்டு தொடங்கிய உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது.
இந்த போரில் ரஷ்யாவின் தாக்குதல்களை மேற்கத்திய நாடுகளின் ராணுவ உதவியோடு உக்ரைன் எதிர்கொண்டு வருகிறது. ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட ஏழு கிராமங்களை மீட்டுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் மையப்பகுதியில் இருக்கும் கிரைவி ரிஹ் என்ற இடத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததாகவும், 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஐந்து மாடி கட்டிடத்தை தாக்கியதாகவும், இதில் அந்த கட்டிடம் தீப்பிடித்து எரிந்தாகவும் டினிபிரோ பெட்ரோவிஸ்க் பிராந்திய கவர்னர் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும், மீட்கும்பணி நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
[su_permalink target=”blank”]
russia attacked Kryvyi Rih with cruise missiles.
One of the missiles hit an apartment building. According to @SESU_UA, at least 4 people were killed, 21 were injured, and 12 were saved from under the rubble. The rescue operation is ongoing.
russia exploits loopholes in the… pic.twitter.com/08Jhwc37CG— Defense of Ukraine (@DefenceU) June 13, 2023
[/su_permalink]