ரஷ்யாவுக்கு நாளை மறுநாள் வரை காலக்கெடு – கடும் கோபத்தில் டிரம்ப்

உக்ரேன் போரை நிறுத்துவதற்கு ஒப்பந்தம் செய்துகொள்ள ரஷ்யாவுக்கு நாளை மறுநாள் வரை அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் காலக்கெடு விதித்துள்ளார்.
அவ்வாறு செய்யாவிட்டால் ரஷ்யா மீது தடைகள் விதிக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடைய செயல்களால் பொறுமை இழந்து வருவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து ஜனாதிபதி டிரம்ப்புடன் ஆக்ககரமான பேச்சுவார்த்தை நடத்தியதாக உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
ரஷ்யா மீது தடைகள் விதிப்பது குறித்தும் அமெரிக்கா உக்ரேனிடமிருந்து ஆளில்லா வானூர்திகளை வாங்குவது குறித்தும் இருவரும் பேசியதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
உக்ரேன் தலைநகர் கீவ் உட்படச் சில நகர்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல் பற்றி டிரம்ப்பிடம் முழுமையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.