உலகம் செய்தி

பாடசாலை மாணவர்களுக்கு போர் பயிற்சி அளிக்கும் ரஷ்யா!! வலுக்கும் கண்டனம்

ரஷ்யா தனது நாட்டின் பாடசாலை மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி அளிப்பதாக வெளியான செய்திக்குப் பிறகு,ரஷ்யாவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் ரஷ்யாஉக்ரைனை ஆக்கிரமித்தது. இதற்கு எதிராக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் தீவிரமாக போராடி வருகிறது.

575 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வரும் நிலையில், போரில் வெற்றி பெற இரு தரப்பினரும் வெவ்வேறு வழிகளைக் கையாண்டனர்.

இதில், ரஷ்யா தனது நாட்டு பாடசாலைகளில் குழந்தைகளை போரில் ஈடுபட இரகசியமாக தயார்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரஷ்யாவில், மேல்நிலைப் பாடசாலைகளுக்கு மேல் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் குழந்தைகளுக்கு பதுங்கு குழி தோண்டுதல், கையெறி குண்டு வீசுதல் மற்றும் துப்பாக்கியைக் கையாளுதல் உள்ளிட்ட பலவிதமான போர்த் திறன்கள் கற்பிக்கப்படுகின்றன.

நாட்டிற்காக தியாகத்தை போற்றும் வகையில் பாடசாலைக் கல்வியில் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. இதில் ரஷ்யா பெரும் பொருட்செலவில் ஈடுபட்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயிற்சி மையங்களை அமைத்துள்ளது.

உக்ரைன் போர், தேசபக்தி மற்றும் இராணுவ பக்தி ஆகியவை பாடத்திட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. மாணவர்கள் பயிற்சிக்கு வர மறுத்தாலும், அரசு நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றனர்.

உயர்நிலைப் பாடசாலைகளில், மாணவர்கள் துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல், தானியங்கி துப்பாக்கிகளைக் கையாளுதல் மற்றும் பிரித்தெடுத்தல் ஆகியவற்றில் பயிற்சி பெற்ற நிபுணர்களால் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.

மேலும் இராணுவ வீரர்கள் அணியும் உடைகள் மற்றும் தொப்பிகளை தைக்க பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

எதிர்கால ரஷ்ய வீரர்களாக குழந்தைகளை கட்டாயப்படுத்த முயற்சிக்கும் நாட்டை சமூக ஊடகங்களில் பயனர்கள் கண்டித்துள்ளனர்.

(Visited 6 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி