ஐரோப்பா

உக்ரைனுடன் அமைதி பேச்சை நிறுத்தியதாக ரஷ்யா அறிவிப்பு

உக்​ரைனுட​னான அமை​திப் பேச்சு நிறுத்​தப்​பட்​டுள்​ளது என்று ரஷ்​யா​வின் கிரெம்​ளின் மாளிகை நேற்று அறி​வித்​துள்​ளது.

ஆனால் இப்​போதைக்​கு, பேச்​சு​வார்த்​தையை நிறுத்​து​வது குறித்து பேசுவது மிக​வும் துல்​லிய​மாக இருக்​கும் என கிரெம்​ளின் மாளிகை குறிப்பிட்டுள்ளது.

உக்​ரைன் – ரஷ்யா போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இரு நாடு​களின் தலை​வர்​களை​யும் தனித்​தனியே சந்​தித்து பேசி​னார். ஆனால் பேச்​சு​வார்த்​தை​யில் தீர்வு எட்​டப்​பட​வில்​லை.

இதனிடையே ரஷ்​யா, உக்​ரைன் இடையி​லான அமை​திப் பேச்​சு​வார்த்​தை​யும் துருக்கி நாட்​டின் தலைநகர் இஸ்​தான்​புல்​லில் 3 சுற்​றுகளாக நடை​பெற்​றது. ஆனால் எந்த முடி​வும் எட்​டப்​பட​வில்​லை.

இந்​நிலை​யில், உக்​ரைனுட​னான அமை​திப் பேச்சு நிறுத்​தப்​பட்​டுள்​ளது என்று ரஷ்​யா​வின் கிரெம்​ளின் மாளிகை நேற்று அறி​வித்​துள்​ளது. இதுகுறித்து ரஷ்ய அரசின் செய்​தித் தொடர்​பாளர் டிமிட்ரி பெஸ்​கோவ் நேற்று கூறும்​போது, “உக்​ரைனுடன் பேச்​சு​வார்த்தை நடத்​து​வதற்​கு பல்​வேறு வழிகளில் நமது நாட்​டின் தலை​வர்​களுக்கு வாய்ப்​பு​கள் உள்​ளன. ஆனால் இப்​போதைக்​கு, பேச்​சு​வார்த்​தையை நிறுத்​து​வது குறித்து பேசுவது மிக​வும் துல்​லிய​மாக இருக்​கும்.

இளஞ்​சிவப்பு நிற கண்​ணாடியை அணிந்து அனைத்​தை​யும் நேர்​மறை​யாகப் பார்க்க முடி​யாது. அமை​திப் பேச்​சு​வார்த்தை பணி​கள் உடனடி​யாக பலன் தரும் என எதிர்​பார்க்க முடி​யாது” என்​றார்​.

(Visited 5 times, 5 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்