பாக்முட் நகரை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு

உக்ரைனில் உள்ள பக்முட் நகரம் முழுமையாக கைப்பற்றப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றில் அறிவித்துள்ளது.
பாக்முட் நகரை கைப்பற்றிய இராணுவத்துக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பக்முட் நகரில் சண்டை தொடர்ந்ததாக உக்ரைன் படைகள் அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, ரஷ்யப் படைகள் பாக்முட்டை கைப்பற்றின.
பாக்முட் சுமார் 70,000 மக்கள் வசிக்கும் நகரம், மேலும் இரு தரப்புப் படைகளும் மோதலின்போது சேதமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாக்முட் நகரைக் கைப்பற்றுவதில் ரஷ்யப் படைகளுக்கு வாக்னரின் கூலிப்படையினர் பெரும் ஆதரவை வழங்கியுள்ளனர்.
(Visited 17 times, 1 visits today)