உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர போராடும் ரஷ்யா – அமெரிக்கா அறிவிப்பு

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ரஷ்யா முடிந்த அளவு விட்டுக் கொடுத்துச் செல்வதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ரஷ்யா முன்வைத்த நிபந்தனைகள் பெருமளவில் குறைந்திருப்பதாக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே டி வான்ஸ் தெரிவித்துள்ளார்.
NBC நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வான்ஸ் அவ்வாறு கூறினார்.
கிழக்கில் உள்ள டொன்பாஸ் பகுதியை உக்ரேன் விட்டுக்கொடுக்கவேண்டும், உக்ரேன் நேட்டோவில் (NATO) சேரக்கூடாது மேற்கத்திய நாட்டுப் படையினரை உக்ரேன் வரவேற்கக்கூடாது என்பதே ரஷ்யாவின் நிபந்தனை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தெளிவான சமிக்ஞைகள் இல்லாவிட்டாலும் முன்னேற்றம் தெரிகிறது. விரைவில் போர் முடிவுக்கு வரும் என வான்ஸ் நம்புகிறார்.
உக்ரேனுக்குப் பாதுகாப்பு உத்தரவாதம், ஜெலன்ஸ்கி தொடர்ந்து ஜனாதிபதி பதவியில் நீடிக்கலாம், ரஷ்யா வன்முறையைக் கைவிட்டால் வர்த்தக வாய்ப்புகள் வழங்கப்படும் என்று ஜனாதிபதி டிரம்ப் கூறியதாக வான்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.