உக்ரைனில் ஏவுகணைத் தாக்குதல்களை துரிதப்படுத்திய ரஷ்யா!
உக்ரைனில் நேற்று ஒரே நாளில் 18 ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், அந்த தாக்குதல்களை முறியடித்ததாகவும், ஆயுதப்படைகளின் தளபதி தெரிவித்துள்ளார்.
இதன்படி 18 ஏவுகணைத் தாக்குதல்களில் 15 தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.30 மணியளவில் தாக்குதல்களை நடத்துவதற்கு “மூலோபாய விமானப் போக்குவரத்து விமானங்கள்” பயன்படுத்தப்பட்டதாகவும், வான்வழித் தாக்குதல் சைரன்கள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஒலித்ததாகவும் ஆயுதப்படைகளின் தளபதியான Valeriy Zaluzhnyi கூறினார்.
ரஷ்யா கடந்த சில நாட்களாக உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





