பிரித்தானியாவில் 30 வினாடிகளில் திருடப்பட்ட Rolls Royce!

பிரித்தானியாவில் 30 வினாடிகளில் Rolls Royce சொகுசுக் கார் ஒன்று திருடப்பட்டுள்ளது.
குறித்த காரை நபர் ஒருவர் திருடிய காணொளி பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
அந்தக் காரின் மதிப்பு சுமார் 350,000 யூரோ என மதிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் காணொளி Reddit சமூகத் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதாக அது தெரிவித்தது.
காலை மணி 4.10க்கு நடந்த அந்தச் சம்பவம் அருகே இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவானது.
வழக்கமான உத்திகளைக் கையாளாமல் சாதாரண கம்பிவடத்தைப் பயன்படுத்திக் காரின் பாதுகாப்பு அம்சத்தில் இருந்த கோளாற்றைத் தமக்குச் சாதகமாக அவர் பயன்படுத்தினார்.
அனைத்தையும் அரை நிமிடத்தில் அவர் செய்துமுடித்தார். இந்தச் சம்பவத்தால் கார் உரிமையாளர்களும் இணையவாசிகளும் காரின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து வினவுகின்றனர்.
(Visited 21 times, 1 visits today)