விளையாட்டு

மோசமான சாதனை படைத்த கேப்டனாக ரோஹித் சர்மா முதலிடம்!

இந்தியா- நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் 2-வது போட்டியில் நியூஸிலாந்து அணி அபாரமாக வெற்றிப் பெற்று 2-0 என தொடரையும் கைப்பற்றியது. இதன் மூலம் இந்திய மண்ணில் தனது ஆதிக்கத்தை நியூஸிலாந்து அணி செலுத்தி இருக்கிறது.

மேலும், இந்தத் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்ததன் மூலம் சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் அதிகத் தோல்விகளைக் கண்ட கேப்டனாக ரோஹித் சர்மா மாறி இருக்கிறார். அதுவும், இந்த நூற்றாண்டில் ஒரு கேப்டனாக சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் போட்டிகளில் தோல்வியைத் தழுவிய இந்திய கேப்டன்கள் பட்டியலில் ரோஹித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார்.

இதுவரையில், மொத்தமாக சொந்த மண்ணில் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில் 4 போட்டிகளில் தோவலியைத் தழுவியுள்ளார். மேலும், இவருக்கு பின்னால் 3 தோல்விகளுடன் எம்.எஸ்.தோனியும் மற்றும் கங்குலியும் 2-ஆம் இடத்தில் இருந்து வருகின்றனர். மேலும், பல ஆண்டுகளாக இந்தியா தக்கவைத்த சாதனையையும், நியூஸிலாந்து அணி இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றி அந்த சாதனையையும் உடைத்துள்ளது.

அதாவது, 12 ஆண்டுகளாக இந்திய அணி தனது சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் தோவலியடைந்தது இல்லை. ஆனால், இந்த தொடரின் தோல்வியின் மூலம் அதுவும் நிகழ்ந்துள்ளது. இந்த மோசமான சாதனையும் ரோஹித் ஷர்மாவின் தலைமையில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!