விராட் கோலியின் மோசமான துடுப்பாட்டம் தொடர்பான விமர்சனங்களுக்கு ரோஹித் சர்மா பதில்!
10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி டி20 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நேற்று (27.06) இடம்பெற்ற அரையிறுதி போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. இந்தியா 5.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் எடுத்திருந்தது. அதற்குள் ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் ஜோடி 73 ரன்களை குவித்து சிக்கலில் இருந்து காப்பாற்றியது.
இரண்டாவது இன்னிங்ஸில், அக்சர் படேல் 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளுடன் இங்கிலாந்தின் துரத்தலைத் தடுத்தார், குல்தீப் யாதவும் 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
இந்நிலையில் இந்த போட்டியில் விராட் கோலியின் துடுப்பாட்டம் மோசமாக விமர்சிக்கப்பட்டது. நேற்றைய போட்டியில் 09 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
அதேபோல் இந்த டி20 போட்டியில் 7 இன்னிங்ஸ்களில் 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஆக அவருடைய மோசமான துடுப்பாட்டம் குறித்து இரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் விமர்சனங்களுக்க பதிலளித்த ரோஹித் சர்மா, “நாங்கள் ஒரு அணியாக மிகவும் அமைதியாக இருந்தோம். சந்தர்ப்பத்தை (இறுதி) நாங்கள் புரிந்துகொள்கிறோம். இணக்கமாக இருப்பது நீங்கள் நல்ல முடிவுகளை எடுக்க உதவுகிறது. அது எங்களுக்கு விளையாட்டை உருவாக்க உதவும். நீங்கள் நன்றாக கிரிக்கெட் விளையாட வேண்டும். அதைத்தான் நாங்கள் செய்ய விரும்புகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.