மீண்டும் முதல் இடத்தை பிடித்த ரோகித் சர்மா

ஐபிஎல் தொடரின் 14வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி மும்பை அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக ரோகித்- இஷான் கிஷன் களமிறங்கினர்.
ஒரு ரன்கள் எடுப்பதற்குள் அந்த அணி இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதில் ரோகித் டக் அவுட்டில் வெளியேறினார்.
இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்களில் தினேஷ் கார்த்திக் உடன் ரோகித் சர்மா இணைந்துள்ளார்.
இவர்கள் இருவரும் 17 முறை டக் அவுட் ஆகி முதல் இடத்தில் உள்ளார். இவர்களுக்கு அடுத்தப்படியாக மேக்ஸ்வெல், பியூஸ் சாவ்லா (15 முறை) உள்ளனர்.
(Visited 13 times, 1 visits today)