செய்தி விளையாட்டு

ஓய்வை அறிவித்த ரோகித் சர்மா

இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேனான ரோகித் சர்மா மூன்று வடிவிலான கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வந்தார்.

டி20 உலகக் கோப்பையை வென்றபின், டி20 வடிவிலான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா மோசமான தோல்வியை சந்தித்ததால் அவரது டெஸ்ட் கேப்டன் பதவி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

ஆனால் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றதால் அதன்பின் கேப்டன் பதவி குறித்து பேசப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக நீடிக்க வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியானது.

இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ரோகித் சர்மா இந்திய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4301 ரன்கள் அடித்துள்ளார்.

இதில் 12 சதங்களும், 18 அரைசதங்களும் அடங்கும். சராசரி 40.57 ஆகும். 16 இன்னிங்சில் 383 பந்து வீசி 224 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீ்ழ்த்தியுள்ளார்.

(Visited 11 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி